News November 9, 2025

வேலூர்: உடல் எரிந்து மூதாட்டி பலி!

image

வேலூர், கட்டுப்படியை சேர்ந்தவர் காந்தாமாள்(85). இவர் கடந்த 31ம் தேதி வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.08) பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

வேலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News November 9, 2025

வேலூரில் 3.5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

image

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் நேற்று (நவ.8) வரை 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்பட்டுள்ளது. என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 9, 2025

வேலூரில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

image

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 60வயது முதியவர் மயங்கி கிடப்பதாக நேற்று புகார் வந்துள்ளது. அதன் பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று முதியோரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.09) பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து. இறந்த முதல்வர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றன.

error: Content is protected !!