News November 9, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் நவ.14 வரை, லேசான மழை பெய்யக்கூடும். மேலும் நவ.12 அன்று சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.
Similar News
News November 9, 2025
சிவகங்கை: ரூ.3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
சிவகங்கை: ரூ. 300 GAS மானியம் பெற இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <
News November 9, 2025
மானாமதுரை: இளம்பெண் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருங்காகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம். இவரது மனைவி சுபா (28). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


