News November 9, 2025

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: 600 பேருக்கு பாதிப்பு

image

சென்னையில் பருவமழைக்குப் பிறகு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அக்டோபரில் 600 புதிய பாதிப்புகளுடன், இந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கை 1,633 ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது இயல்பான பருவகால உயர்வு என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News

News March 9, 2026

சென்னையில் கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

image

காசிமேட்டை சேர்ந்தவர் கவின் (25). இவர், காசிமேடு மீனவன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்ற போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது மோதியுள்ளார். அதை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் கவின் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் கவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2026

சென்னை: ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

சென்னை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 8, 2026

சென்னை: தீராத நோய் எல்லாம் தீர இங்கு போங்க!

image

திருவான்மியூரில் அமைந்துள்ளது அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம். வசிஷ்டமுனிவரின் பூஜைக்காக, இந்திரன் காமதேனுவை உடன் அனுப்பிய போது, காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்ய, முனிவர் அதனை சபித்தார். காமதேனு, இந்த கோயிலிலுள்ள வன்னி மரத்தடி சிவனை வணங்கி விமோசனம் பெற்றது. இங்கு பாலாபிஷேம செய்து வழிபட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. முக்தி கிடைக்க இங்கு போய் வழிபடுங்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!