News November 9, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம், பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் App மூலம் உடனடி கடன், குறைந்த வட்டியில் loan தருவதாக கூறி உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 9, 2025

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK <<>>HERE}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

புதுச்சேரி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை

image

நிரவி விழிதியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் திருநள்ளாறை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 9, 2025

புதுவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மாணவி

image

புதுச்சேரி, மூலக்குளம் பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ராமு. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகள் லோகேஸ்வரி கடந்த 5-ம் தேதி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காண்பித்து பரிசோதனை செய்ததில் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று லோகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!