News November 9, 2025
தஞ்சை: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலி

தஞ்சாவூர் இராமநாதபுரம் கிராமம் தெற்கு மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் எஸ். சரவணன் இவர் மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அவரது ஆடுகளை சுமார் 10 தெரு நாய்கள் கடித்துக் குதறி ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆடுகள் உயிரிழந்ததால் சரவணன் குடும்பத்தினர் வேதனையடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
தஞ்சை: அரசு வேலை – தேர்வு இல்லை!

தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 91 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.9) கடைசி நாளாகும்.
1. கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
2. சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4. வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
6. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
தஞ்சை எஸ்.பி திடீர் ஆய்வு

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,655 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் எதிரே உள்ள குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற தேர்வு ஏற்பாட்டு பணிகளை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
News November 9, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 250 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையாகிய இன்றும் (நவ.9) செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலையினை தடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


