News November 9, 2025

சேலம்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

image

சேலம் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!

Similar News

News March 22, 2026

FLASH சேலம்: மனைவி கண் முன்னே கணவன் கொலை!

image

பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் கோபால் (43). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டதில் குப்பன், கோபாலை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். மனைவி கண் முன்னே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அம்மாபேட்டை போலீசார் குப்பனை தேடி வருகின்றனர்.

News March 22, 2026

சேலம்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

சேலத்தில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

image

சேலம் மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற எண் உதவிக்கு அழைக்கலாம். ஒரு ஓட்டு பெரும் மாற்றத்தை உருவாக்கும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!