News November 9, 2025

மயிலாடுதுறை: கால அவகாசம் நீட்டிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு நவ.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதாா், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி நவ.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

Similar News

News November 9, 2025

மயிலாடுதுறை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News November 9, 2025

மயிலாடுதுறை: போதையில் ரகளை; அதிரடி கைது

image

பொறையாறு அருகே அரசலங்குடி கிராமம் வழியாக நேற்று முன்தினம் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேனை வழிமறித்த போதை இளைஞர்கள் சிலர் வேன் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, வேன் கண்ணாடியை உடைத்த தாமரைச்செல்வன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆகாஷ், கபிலன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News November 9, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!