News November 9, 2025

விழுப்புரம்: மாணவியிடம் போலீஸ் பாலியல் சீண்டல்

image

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோ, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரில் இளங்கோவை ஆரோவில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News November 9, 2025

விழுப்புரம்: கடையில் அதிக விலையா..? உடனே புகார்!

image

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி விகிதங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் 1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிலோ https://consumerhelpline.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்.(SHARE IT)

News November 9, 2025

விழுப்புரம் பயணிகளின் கவனத்திற்கு!

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் உழவன் விரைவு ரயில்(16866), சேது விரைவு ரயில்(22662) சேவை, எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணியின் காரணமாக நவ.10ஆம் தேதி முதல் நவ.29ஆம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News November 9, 2025

விழுப்புரம்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

image

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.

1.முதலில் <>இங்கே<<>> கிளிக் செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.

2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.

3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.

4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.

5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

error: Content is protected !!