News November 9, 2025

அரியலூர்: குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நவ.10-ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

அரியலூர்: SIR கணக்கெடுப்புக்கு உதவி மையம்!

image

அரியலூ மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். எனவே இதனை பயண்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 9, 2025

அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News November 9, 2025

அரியலூர்: தனிமையில் இருந்த இளைஞர் தற்கொலை

image

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி வடக்குத்தெரு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!