News November 9, 2025
எந்த காவியாலும் திமுகவை வீழ்த்த முடியாது: CM ஸ்டாலின்

EC-ஐ பயன்படுத்தி திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த நடக்கும் முயற்சி தான் SIR என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவசர அவசரமாக SIR அமல்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பிய CM, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர் இடம்பெறாமல் இருப்பதை திமுகவினர் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
Similar News
News November 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.
News November 9, 2025
‘How to kill old lady’ யூடியூப் பார்த்து கொலை செய்த மருமகள்!

‘How to kill an old lady’ என யூடியூப்பில் வீடியோ பார்த்து, மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில், கணவரிடம் மாமியார் பொய் சொல்வதை பொறுத்து கொள்ளாத மருமகள், சதித்திட்டம் தீட்டியுள்ளார். வீட்டிலேயே மாமியாரை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளார். பூஜை அறையில் விளக்கு தீப்பிடித்து மாமியார் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய நிலையில், விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.
News November 9, 2025
மருத்துவமனையில் பிரபல நடிகர்.. வீட்டில் பதற்றம்

சென்னையில் உள்ள நடிகர் அருள்நிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அருள்நிதி, ஹாஸ்பிடலில் ஓய்வில் இருக்கிறார். CM ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் வீட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


