News November 9, 2025
நவம்பர் 9: வரலாற்றில் இன்று

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.
Similar News
News November 9, 2025
தோனியின் மாபெரும் ரெக்கார்டை உடைக்கும் SA வீரர்!

ODI கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை MS தோனி தன்வசம் வைத்திருந்தார். அவர் இதுவரை 7 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். இச்சாதனையை தற்போது, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் சமன் செய்துள்ளார். அவர் விரைவில் தோனியின் சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News November 9, 2025
பைசன் OTT ரிலீஸ் தேதி!

துருவ் விக்ரம், பசுபதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’, பெரும் வெற்றி படமாக அமைந்தது. விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட இப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், ₹50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. ‘டியூட்’ படமும் நவம்பர் 14-ம் தேதி தான் OTT-யில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

மீன் விலை இந்த வாரமும் கிடுகிடுவென உயர்ந்து அசைவ பிரியர்களை அதிர வைத்துள்ளது. காசிமேட்டில் முதல் தர வஞ்சிரம் 1 கிலோ ₹2,500-க்கும், கொடுவா ₹800-க்கும் விற்பனையாகிறது. பால் சுறா, சீலா, சங்கரா மீன் கிலோ தலா ₹600, பாறை ₹800, நெத்திலி – ₹400, நண்டு – ₹600, பண்ணா – ₹500-க்கு விற்பனையாகிறது. கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மீன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உங்கள் ஊரில் என்ன விலை?


