News November 9, 2025
GPay, PhonePe, Paytm பணத்துக்கு சிக்கல்… உஷாரா இருங்க!

கிரெடிட் கார்டுடன் GPay, PhonePe, Paytm போன்ற UPI ஆப்களை லிங்க் செய்து, பலரும் பணம் செலுத்துகின்றனர். உங்களின் கிரெடிட் கார்டு ரூபே கார்டு என்றால் மட்டுமே ₹2,000 வரையான கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், கிரெடிட் கார்டு மூலம் UPI-யில் ₹2,000+ தொகைக்கு பணம் செலுத்தினால், கடைக்காரர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் கடைக்காரர் உங்களிடமே இதை வசூலிப்பார். எனவே, கவனம் தேவை.
Similar News
News November 9, 2025
ஓஷோவின் பொன்மொழிகள்!

*வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.
News November 9, 2025
தமிழ் தம்பதியின் கல்யாண பத்திரிகை.. SM-ல் வைரல்

சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் தம்பதி அடித்த வரவேற்பு பத்திரிகை, தற்போது உலகளவில் வைரலாகியுள்ளது. மருத்துவ துறையை சேர்ந்த மணமகன், மணமகள் மாத்திரை அட்டை வடிவில் பத்திரிகை அடித்து நண்பர்களுக்கு கொடுத்துள்ளனர். மாத்திரையின் உற்பத்தி இடத்தில் பெற்றோர் பெயரையும், பரிந்துரையில் முகூர்த்த தேதி, நேரத்தை குறிப்பிட்டுள்ளார். எல்லாம் சரி Expiry date இல்லையா என விளையாட்டாக நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
News November 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 514
▶குறள்: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
▶பொருள்: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.


