News November 8, 2025

‘நாகேந்திரன் இறக்கவில்லை’ ஆம்ஸ்ட்ராங் சகோதரர் புகார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை என சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் இறக்கவில்லை என்றும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் கடந்த அக்.9-ம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 9, 2025

ஜொலி ஜொலித்த வாரணாசி PHOTOS

image

தீபாவளிக்குப் பதினைந்து நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படும் வருடாந்தர விழாவான தேவ் தீபாவளி, முழு நிலவு இரவில் கொண்டாடப்பட்டது. வாரணாசியின் கங்கைக் கரையில் சுமார் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு ஜொலித்தன. ஆற்றின் குறுக்கே படகு சவாரிகள், வாணவேடிக்கைகள் என வண்ணமயமாக இருந்தது. இதன் போட்டோக்களை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க

News November 9, 2025

ஹெல்மெட் அணியாததற்கு ₹21 லட்சம் அபராதம்… VIRAL!

image

உ.பி., முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற அன்மோல் என்பவரை போலீஸ் மடக்கி பிடித்தனர். வண்டி சாவியை உருவிய போலீஸ், அவருக்கு அபராதம் விதித்து சலானை நீட்டியது. அதைப் பார்த்த அன்மோலுக்கு அங்கேயே மயக்கம் வந்துவிட்டது. ஆம், ₹20,74,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பயந்துபோன அவர் போலீஸிடம் கேட்க, இது ஜஸ்ட் டெக்னிகல் ஃபால்ட், ₹4,000-ஐ கட்டிவிட்டு நடையை கட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.

News November 9, 2025

காரத்தே மாஸ்டராக மாறிய அன்புமணி

image

சென்னையில் உலக அளவிலான கலை கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணிக்கு கெளரவ பிளாக் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் கராத்தே உடையுடன் பங்கேற்று பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி இனிமேல் தற்காப்பு கலைகளை காற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். மேலும், தங்களது ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் PT period இருக்கும் என்றும் கூறினார்.

error: Content is protected !!