News November 8, 2025

இன்று மாலை 6 மணிக்கு ரெடியா இருங்க!

image

அரசியல் வருகையால் விஜய்க்கு இந்தாண்டு எந்த படமும் ரிலீசாகவில்லை. ‘ஜனநாயகன்’, அவரது கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ இன்று மாலை 6.03-க்கு வெளியாக உள்ளது. விஜய்யின் துள்ளலான டான்ஸை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், அரசியல் சார்ந்த வரிகள் பாடலில் இடம்பெறுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரெல்லாம் பாடலுக்கு வெயிட்டிங்?

Similar News

News November 8, 2025

ஆசியாவின் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா?

image

ஆசியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் மும்பை முதல் இடம் பிடித்துள்ளது. அதாவது, 94% மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக, பொழுதுபோக்கு, சமூக வாழ்க்கை, தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மும்பை சிறந்து விளங்குவதாக, டைம் அவுட்டின் ‘சிட்டி லைஃப் இண்டெக்ஸ் 2025’ தெரிவித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்கள் மும்பைக்கு அடுத்த இடங்களில் உள்ளன.

News November 8, 2025

கிளாஸி துல்கர் சல்மான்

image

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு, 3 மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது குரல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கதை தேர்வில் அதீத கவனம் செலுத்தும் துல்கர், நடிப்பிலும் மிரட்டி வருகிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிளாஸி துல்கர் சல்மானை பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 8, 2025

பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

image

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!