News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.
Similar News
News November 8, 2025
தமிழகத்தின் பழமையான கோயில்கள் லிஸ்ட்

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள், வரலாற்று சிறப்புடையவை. ஆன்மிக சுற்றுலா செல்வோர், எந்த கோயில்களுக்கு செல்வது என்பதில் குழப்பம் இருக்கும். கவலையை விடுங்க. கண்களை மூடிக்கொண்டு, பிரசித்தி பெற்ற இந்த பழமையான கோயில்களுக்கு செல்லுங்கள். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
இஸ்ரேல் PM-க்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

காஸாவில் படுகொலையில் ஈடுபட்டது, பேரழிவுக்கு காரணமானது உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி வாரண்ட் பிறப்பித்துள்ளது. நெதன்யாகு, 2 அமைச்சர்கள் உள்பட 37 இஸ்ரேலியர்களின் பெயர்கள் இந்த வாரண்ட்டில் உள்ளது. இஸ்ரேல் இதை நிராகரித்துள்ள நிலையில், அரசியல் நெருக்கடியால் மக்களை ஏமாற்றவே துருக்கி அதிபர் எர்டோகன் இந்த ஸ்டண்ட்டை செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
News November 8, 2025
காசு வாங்குங்க, ஆனா ஓட்டு போடாதீங்க: பிரியங்கா காந்தி

பிஹாரில் அரசின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. தேர்தல் என்பதால் இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இந்த பணத்தை கொடுப்பதன் மூலம் வாக்குகளை பெற முடியும் என்று PM மோடி நினைப்பதாக பிரியங்கா விமர்சித்துள்ளார். பகல்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பணத்தை வாங்கி கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என கூறியுள்ளார்.


