News November 8, 2025
மருத்துவ துறையின் லெஜண்ட் காலமானார்

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
செல்போன் ரீசார்ஜ்… இது 3 மாதம் இலவசம்

சினிமா பிரியர்களுக்காகவே ஜியோ அருமையான திட்டத்தை வைத்துள்ளது. ₹1,099-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் உள்ளிட்டவற்றை பெறலாம். மேலும், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் (மொபைல்/டிவி) சேவையை 3 மாதங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். உங்களிடம் 5G செல்போன் இருந்தால், இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும். SHARE IT
News November 8, 2025
எச்சரிக்கை! இயர்போனை அதிகம் யூஸ் பண்றீங்களா?

செல்போன் மட்டுமல்ல, இயர்போனும் இப்போது உடலின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. பலரும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இயர்போனை பயன்படுத்துகின்றனர். அப்படி கடந்த 3 ஆண்டுகளாக தினம் 12 மணிநேரம் இயர்போன் பயன்படுத்திய ஒரு இளம்பெண், கேட்கும் திறனை இழந்துள்ளதுடன், காதில் ‘டின்’ என்ற சத்தம் மட்டுமே கேட்பதாக SM-ல் பகிர்ந்துள்ளார். நீங்கள் எப்படி? எவ்வளவு நேரம் இயர்போன் யூஸ் பண்றீங்க?
News November 8, 2025
அடுத்த ராஜேந்திர சோழன் உதயநிதி: துரைமுருகன்

ராஜராஜன் மன்னராக இருந்தபோதே ராஜேந்திர சோழன் மன்னராகி அதிக நிலப்பரப்பை வென்றார்; அதேபோல், ஒருநாள் ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் உதயநிதி வருவார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவராக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


