News November 8, 2025

‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

image

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

Similar News

News March 21, 2026

திமுக கூட்டணியில் தொடர்வதா? CPM ஆலோசனை

image

அவசர மாநில செயற்குழு கூட்டத்தை இன்று காலை CPM நடத்துகிறது. இதில் திமுகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு இழுபறி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா என்றும் விவாதிக்கப்பட உள்ளதாம். திமுக 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருவதால் CPM அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 21, பங்குனி 7 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்:7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.

News March 21, 2026

டெல்லியில் கருணாநிதி காத்திருக்கவில்லையா? அதிமுக

image

டெல்லியில் EPS முகாமிட்டதை விமர்சித்த CM ஸ்டாலினுக்கு, அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. 2011-ல் மகள்(கனிமொழி) திகாருக்கு சென்றுவிடுவார் என பதறிப்போய், டெல்லியில் கருணாநிதி தவமாய் காத்திருக்கவில்லையா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அறிவாலயத்தின் மேல் மாடியில் நடந்த ரெய்டுக்கு பயந்து, கீழ் மாடியில் காங்.,-க்கு 63 தருவதாக பேசியவர் தான் கருணாநிதி எனவும் அதிமுக கூறியுள்ளது.

error: Content is protected !!