News November 8, 2025
X-Ray பிறந்த நாள் இன்று!

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.
Similar News
News March 22, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹25,000 சரிவு.. மேலும் குறையுமா?

தங்கம், கடந்த ஜனவரி இறுதியில் புதிய உச்சமாக 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையானது. அதன் பின்னர், ஏற்றம், இறக்கம் என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி இன்று ₹1,08,960 ஆக உள்ளது. அதாவது சவரனுக்கு ₹25,440 குறைந்துள்ளது. தங்கம் விலை மேலும் குறையுமா? தற்போது வாங்கலாமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது தங்கம் விலை சில வாரங்களுக்கு சரிந்து பின்னர் மீண்டும் உயரும் எனக் கூறியுள்ளனர்.
News March 22, 2026
டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் ஈரான்..

48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மின்சக்தி நிலையங்கள் மீது தாக்கல் நடத்தப்படும் என்று <<19445887>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், எங்களை குறிவைத்தால் பதிலுக்கு USA-வுக்கு தொடர்புடைய IT கட்டமைப்புகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை குறிவைப்போம் என எச்சரித்துள்ளது. இதன்மூலம், ஹார்முஸை திறக்கும் முடிவில் தாங்கள் இல்லை என ஈரான் தெளிவுப்படுத்தியுள்ளது.
News March 22, 2026
சோப்பு, வாஷிங் பவுடர் விலை உயர்கிறது

மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக துணி துவைக்கும் சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலையை உயர்த்துவதாக தமிழ்நாடு சிறு தொழில் சோப்பு, டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எந்தெந்த பொருள்கள் எவ்வளவு விலை உயர்கிறது என்ற பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் மிகவும் முக்கியமானது சோப்பு என்பதால், இந்த விலை உயர்வு நேரடியாக மக்களை பாதிக்கும்.


