News November 8, 2025
அமெரிக்காவே வேணாம் என கதறும் சிட்டிசன்கள்!

USA-ல் 18-34 வயதுடைய 65% பேர் நாட்டை விட்டு வெளியேற விருப்பப்படுவதாக American Psychological Association-ன் சர்வேயில் தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், 39% பேர் அரசியல் சூழல் காரணமாக வெளியேற நினைப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பணவீக்கம், மருத்துவ செலவுகள், விலைவாசி, வேலையின்மை, தனிமை ஆகியவையே காரணம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
BIG FLASH: ஜப்பான் – வடகொரியா இடையே பதற்றம்

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக தனது X தளத்தில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மேற்கு ஆசிய நாடுகளான ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா, ஜப்பான் இடையேயும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
News March 14, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் SM-ல் புகார் அளித்துள்ளனர். இதனால், LPG கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளின் வாசலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி IOC, BPC, HPC நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய மத்திய அரசு புதிய எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மேலே உள்ள போட்டோவை SWIPE செய்து பாருங்க.
News March 14, 2026
விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?


