News November 8, 2025
விழுப்புரம்: மாடு வாங்க மானியம் பெறுவது எப்படி?

1)தமிழக அரசு சார்பாக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
2)இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
3) சதவீத வட்டிக்கு இந்தத் திட்டத்தில் மானியத்துடன் 5 சதவீதத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
4)விருப்பமுள்ளவர்க உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 8, 2025
விழுப்புரம்: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

விழுப்புரம் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
விழுப்புரம்: தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், திருமுண்டீச்சரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ம.ஜெயச்சந்திரன். சுமை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை முற்பகலில் அங்குள்ள வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகளை மீட்பதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். வங்கி அலுவலர்கள் அடுத்த வாரம் வருமாறு கூறியதால் வீடு திரும்பிய அவர், வாகனத்தில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
News November 8, 2025
விழுப்புரம்: காவலர் பணி தேர்வர்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை(நவ.09) நடைபெற உள்ள தேர்வில் 10,859 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து பேசிய மாவட்ட எஸ்.பி சரவணன், ‘தேர்வாளர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 9:30 மணிக்குமேல் தேர்வு எழுத வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


