News April 19, 2024
அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. விமான நிலையங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 5, 2026
‘பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் கொடுமையே’

ஏற்கெனவே பாலியல் உறவுக்கு சம்மதித்து உறவு கொண்ட ஒருவர், அடுத்ததாக கட்டாயத்தின் பேரில் உறவுக்கு சம்மதம் தெரிவித்தால், அது பாலியல் துன்புறுத்தல் தான் என்று டெல்லி HC தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதானவரின் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, கடந்த காலத்தில் உறவில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் உறவு கொள்வது என்பது சம்மதம் ஆகாது என்றும் HC தெளிவுப்படுத்தியது.
News February 5, 2026
ரூபாய் அச்சிட எவ்வளவு செலவு ஆகுது தெரியுமா?

இந்திய நாணயத்தின் மதிப்பை விட அதன் தயாரிப்பு செலவு அதிகம். அது உங்களுக்கு தெரியுமா? நாணயம் மற்றும் நோட்டுகளின் உற்பத்தி செலவு எவ்வளவு என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க. தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதால், நோட்டு மற்றும் நாணயங்கள் தயாரிப்பதற்கான தேவை குறைந்து வருகிறது.
News February 5, 2026
இதனால்தான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்.. சிம்பு

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததன் காரணத்தை நடிகர் சிம்பு கூறியுள்ளார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் விஜய்யின் கடைசி படம் ரிலீசாக வேண்டும் என்பதால் அவருக்கு ஆதரவாக ட்வீட் போட்டதாக கூறினார். மேலும், அரசியல் குறித்து பேசுவதற்கு தான் சரியான ஆள் அல்ல என கூறிய சிம்பு என்றாலும் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.


