News November 8, 2025
தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.
Similar News
News November 8, 2025
எச்சரிக்கை! இயர்போனை அதிகம் யூஸ் பண்றீங்களா?

செல்போன் மட்டுமல்ல, இயர்போனும் இப்போது உடலின் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டது. பலரும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இயர்போனை பயன்படுத்துகின்றனர். அப்படி கடந்த 3 ஆண்டுகளாக தினம் 12 மணிநேரம் இயர்போன் பயன்படுத்திய ஒரு இளம்பெண், கேட்கும் திறனை இழந்துள்ளதுடன், காதில் ‘டின்’ என்ற சத்தம் மட்டுமே கேட்பதாக SM-ல் பகிர்ந்துள்ளார். நீங்கள் எப்படி? எவ்வளவு நேரம் இயர்போன் யூஸ் பண்றீங்க?
News November 8, 2025
அடுத்த ராஜேந்திர சோழன் உதயநிதி: துரைமுருகன்

ராஜராஜன் மன்னராக இருந்தபோதே ராஜேந்திர சோழன் மன்னராகி அதிக நிலப்பரப்பை வென்றார்; அதேபோல், ஒருநாள் ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் உதயநிதி வருவார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவராக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
ROOM போட்டு பேசுங்கள்: நடிகை கஸ்தூரி

கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு பேட்டியில் அவர், நேரங்கெட்ட நேரத்தில் பெண்கள் வெளியில் சுற்றக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழல் என்றால் ROOM போட்டு பேசுங்கள் என்றும், ஆண்களோ, பெண்களோ அவரவர்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அட்வைஸ் அளித்துள்ளார்.


