News April 19, 2024
மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது

மக்கள் 100 சதவிகிதம் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட் நகர் வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் அவர் வாக்கு செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி தொகுதியில் தனக்கான ஆதரவு மிகவும் அமோகமாக இருப்பதாகக் கூறினார். மேலும், நடைபெற்று வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.
Similar News
News January 21, 2026
மோடி, கோலி இல்ல.. இவர்தான் நாட்டின் டாப் செலிபிரிட்டி!

ஜனவரி 1-15 காலகட்டத்தில் நாட்டின் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. சோஷியல் மீடியா டிரெண்ட், மக்கள்- மீடியாவின் கவனத்தில் தொடர்ந்து நீடிப்பது போன்ற தரவுகளின் கீழ் இந்த லிஸ்ட் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் PM மோடி, விராட் கோலி ஆகியோரை முந்தி நடிகர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் என அறிய மேலே உள்ள படத்தை இடதுபக்கமாக Swipe பண்ணுங்க.
News January 21, 2026
வைத்திலிங்கம் விலகினார்.. OPS-க்கு பேரதிர்ச்சி

வைத்திலிங்கம் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக திமுக அலுவலகம் சென்று CM முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள உள்ளார் என்கின்றனர். தஞ்சை ஒரத்தநாடு MLA-வாக இருக்கும் இவர், 2001-2006-ல் வனத்துறை & சுற்றுச்சூழல் அமைச்சர், 2011-2016-ல் நகர்புற வளர்ச்சி அமைச்சர், பிறகு MP-யாக இருந்தார். இந்நிலையில் அணிக்கு பலம் சேர்த்த ஒருவர் எடுத்துள்ள இம்முடிவு OPS-க்கு அதிர்ச்சியளித்துள்ளது.
News January 21, 2026
ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக கூடாதா? ஓவைசி

ஹிஜாப் அணிந்த ஒரு பெண் இந்தியாவின் பிரதமராக வருவதைக் கனவு காண்பது ஒரு குற்றமா என AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு நாட்டைக் குழிதோண்டிப் புதைக்கும் இதுபோன்ற சிந்தனைகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இப்படி ஒரு கனவை காண அரசியலமைப்புச் சட்டம் எங்களை தடுக்கிறதா என ஓவைசி காட்டமாக பேசியுள்ளார்.


