News November 8, 2025
National Roundup: சபரிமலையில் செயற்கை குங்குமத்திற்கு தடை

*கர்நாடகாவில் ஒரு டன் கரும்பு 3,300-க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. *டெல்லியில் காற்று மாசினால் அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி-மாலை 6.30 மணியாக மாற்றம். *சபரிமலையில் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிப்பு. *எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார். *அரசு முறை பயணமாக ஜனாதிபதி இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம்.
Similar News
News November 8, 2025
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
மாதம் ₹10 லட்சம் கேட்கும் ஷமியின் மனைவி

சமீபமாக விவாகரத்து பெறும்போது சிலர் கேட்கும் ஜீவனாம்ச தொகை பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்படி நெட்டிசன்களின் கேள்விகளில் சிக்கியுள்ளார் ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். அவர், ஷமி தனக்கு வழங்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது எனவும், ₹10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் வாதம் நடந்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன?
News November 8, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் Ex அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த EX தாந்தோணி நகரக் கழக செயலாளர் ரவி, துணை செயலாளர் K.மகாதேவன், வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் N.பாலாஜி ஆகியோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


