News November 8, 2025
திருச்சி: பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (நவ.8) வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
திருச்சி: 8-ஆம் வகுப்பு போதும், அரசு வேலை ரெடி!

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள <
News November 8, 2025
திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News November 8, 2025
திருச்சி: முன்னாள் வட்டாட்சியரை கொலை – 3 பேர் கைது

திருச்சி தாயனூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் வட்டாட்சியர் சுப்பிரமணி என்பவர், நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மூன்று பேர் தலைமறைவாகினர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் பதுங்கி இருந்த அசோக்குமார், தமிழரசன் மற்றும் சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


