News November 8, 2025

கும்மிடிப்பூண்டி ‌நாளை சிறப்பு‌ மருத்துவ‌முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம்”நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” நாளை‌ 08.11.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற‌ உள்ளது.இதில் சிறப்பு மருத்துவ சேவைகள்,மாற்றுத்திறனாளி‌சான்றிதழ்‌ இலவசமாக வழங்கபடவுள்ளன.இம்முகாமினை‌ ஏழை‌ எளிய‌ மக்கள் கலந்து கொண்டு ‌பயன்அடையுமாறு‌ அரசு‌ சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

திருவள்ளூர்: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.8) குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல்/மாற்றம், அட்டையில் திருத்தம், புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இந்த தகவலை தெரியப்படுத்துங்க.

News November 8, 2025

திருவள்ளூர்: கஞ்சா கூடமாக மாறிய பேருந்து!

image

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் (நவ.7) வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநில நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த, திருநெல்வேலி தெற்குபட்டி சேர்ந்த ஈசாக்ராஜ் (19) என்பவரிடம், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2025

திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!