News November 8, 2025

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

image

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

Similar News

News November 8, 2025

ஆம்னி பஸ்கள் எல்லையில் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

image

TN ஆம்னி பஸ்களுக்கு கேரளாவில் ₹70 லட்சம் அபராதம் விதித்ததால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை, நெல்லை, குமரி மாவட்ட எல்லைகளில் சுமார் 200 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் என்பதால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில பயணிகள் கட்டணத்தை திருப்பி கேட்டு பஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News November 8, 2025

எளியோருக்கு அருமருந்தாகும் எருக்கு மூலிகை

image

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. ➤செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் ➤செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் ➤இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.

News November 8, 2025

இதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்: டிரம்ப்

image

தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெற​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என டிரம்ப் கூறியுள்ளார். இந்த மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடப்பது அவமானம் எனச் சாடிய அவர், பிரான்ஸ், ஜெர்மன் வம்சாவளியினர் அந்நாட்டில் கொல்லப்படுவது மோசமான ஒன்று எனவும் விமர்சித்துள்ளார். இதனால், US அதிகாரிகள் யாரும் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!