News November 8, 2025
வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.
Similar News
News November 8, 2025
பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.
News November 8, 2025
National Roundup: சபரிமலையில் செயற்கை குங்குமத்திற்கு தடை

*கர்நாடகாவில் ஒரு டன் கரும்பு 3,300-க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. *டெல்லியில் காற்று மாசினால் அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி-மாலை 6.30 மணியாக மாற்றம். *சபரிமலையில் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிப்பு. *எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார். *அரசு முறை பயணமாக ஜனாதிபதி இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம்.
News November 8, 2025
Sports Roundup: இந்தியா A முன்னிலை

*தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியின், 2-ம் நாள் முடிவில் இந்தியா A அணி 112 ரன்கள் முன்னிலை. *ரஞ்சி கோப்பையில் இன்று ஆந்திரா Vs தமிழகம் மோதல். *2025 மகளிர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு. *ஆசிய பார்வையற்றோர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில், கபில் பர்மர் வெள்ளி வென்றார். *Alto ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


