News April 19, 2024
வரிசையில் நின்று வாக்களித்த பத்மஸ்ரீ பாட்டி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், முதியோர் என பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையாற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Similar News
News January 18, 2026
இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
News January 18, 2026
வங்கி கஸ்டமர்களுக்கு HAPPY NEWS

ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் RBI புதிய விதிகளின்படி, வங்கியால் ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு ₹30 லட்சம் வரை இழப்பீடு வழங்க, வங்கி குறைதீர்ப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மன உளைச்சல், நேர விரயத்திற்காக கூடுதலாக ₹3 லட்சம் வரை பெற முடியும். புகார்களை சரிபார்க்க மத்திய ரசீது மற்றும் செயலாக்க மையம் நிறுவப்பட உள்ள நிலையில், <
News January 18, 2026
ஒரு போன் எப்போது Expiry ஆகும் தெரியுமா?

செல்போனுக்கும் Expiry date இருக்கிறது. ஆனால் அதை நிறுவனங்கள் நேரடியாக சொல்வதில்லை. போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ அதுவே போனின் Expiry தேதியாகும். இவை ஃபோன் பாக்ஸில் இருக்கும். அல்லது settings -> about -> செக்யூரிட்டியில் பார்க்கலாம். இது போன் கம்பெனியை பொருத்து மாறுபடும். சில கம்பெனிகள் ஓரிரு வருடங்களும், ஐபோன்கள் 7 வருடங்கள் வரையும் அளிக்கிறது. உங்க போனின் Expiry date பாருங்க!


