News November 7, 2025
BREAKING: கேரளாவுக்கு ஆம்னி பஸ்கள் செல்லாது

கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு ₹70 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கண்டித்து இன்று இரவு முதல் கேரளாவிற்கு ஆம்னி பஸ்களை இயக்குவதில்லை என்ற முடிவை பஸ் உரிமையாளர் எடுத்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
அனைவருக்கும் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம்

25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. முன்னதாக 18-25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று அறிவித்திருந்தது. 5ஜி பிளான் வைத்திருப்பவர்கள் My Jio செயலி பயன்படுத்தி இதை கிளெய்ம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ₹35,100 மதிப்பிலான திட்டங்களை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
News November 8, 2025
பிஹார் மக்களை திமுக இழிவுபடுத்தியது: அமித் ஷா

பிஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு திமுக இழிவுபடுத்தியதாக கூறி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு பிடித்தமான CM என்று ஸ்டாலினை தேஜஸ்வி குறிப்பிட்டதாக பேசிய அமித்ஷா , அவரது கட்சியான திமுக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதாகவும், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN-ல் பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், போதைப் பொருள்கள் பயன்பாட்டை எதிர்த்தும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார். மதுவின் பிடியில் இருந்து இளைய தலைமுறையினரை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சமத்துவ நடைபயணம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜன.2-ல் தொடங்கும் இந்த நடைபயணத்தை மதுரையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வைகோ பேசியுள்ளார்.


