News November 7, 2025

திருப்பத்தூர் வந்தடைந்த 200 டன் யூரியா!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு சார்பில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தனியார் உர கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை சார்பில் இன்று (நவ.7) சுமார் 200 டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

ஆலங்குப்பம் பகுதியில் அரசு உயரதிகாரிகள் ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா வளையாம்பட்டு ஊராட்சியில் இன்று (நவ.7)கண்காணிப்பு அலுவலர்/போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு துறை ஆணையர் கஜலட்சுமி, வாணியம்பாடி தாலுகா வளையாம்பட்டு பகுதியில் தரைப்பாலம் மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 7, 2025

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.7) திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் அனைத்து துறை திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!