News November 7, 2025
வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?

பல உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வெந்தயத்தை வெறுமனே சாப்பிடுவதை விட, இப்படி சாப்பிட்டால் நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்னை தீரும், உடல் எடையை சீராக்கும், Sugar அளவை பராமரிக்கும். *வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து பருகினால், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும், சளி, இருமல், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
Similar News
News November 8, 2025
தமிழை வைத்து தமிழர்களை சுரண்டும் திமுக: நயினார்

தேர்தல் வாக்குறுதிபடி காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகையை திமுக வழங்காதது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழை வைத்து தமிழர்களைச் சுரண்டி திமுக ஆட்சியை பிடித்ததாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலினின் அரசு மாடுபிடி வீரர்களுக்கான பரிசுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அரசு இன்றுவரை வாய்திறக்க மறுப்பதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை. *ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
News November 8, 2025
கோவை மாணவி மீது பழிசுமத்த கூடாது: கனிமொழி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கனிமொழி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், அப்பெண் மீது பழிசுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவியின் மீது பழிசுமத்தும் விதமாக திமுக கூட்டணியில் உள்ள கொங்கு ஈஸ்வரன் MLA பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


