News April 19, 2024
தி.மலை: வாக்குச்சாவடி மையத்தில் குழப்பம்

செங்கம், பொரசப்பட்டு கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதனால், மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று வாக்கு பதிவு தலைமை அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களை மாநில மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவருமான ப.கார்த்தி வேல்மாறன் இன்று (டிச.26) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
News December 26, 2025
தி.மலையில் முதல்வருக்கு அமைச்சர் எ.வ.வேலு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (டிச.26) இன்று வருகை தந்தார். அவரை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொன்னாடை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற உள்ள மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
News December 26, 2025
முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (டிச.27) நாளை திருவண்ணாமலையில் கலந்து கொள்ளும் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


