News November 7, 2025
புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 12, 2026
திருவள்ளூரில் தலை நசுங்கி கொடூர பலி!

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகன்(69). இவரது மனைவி பெரியபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) தனது சைக்கிளில் பெரியபாளையம் அரசுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேம்பால சாலை வளைவில் திரும்பும் போது, அந்தப் பக்கம் வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தார்.
News February 12, 2026
கும்மிடிப்பூண்டியில் பெரும் துயர சம்பவம்!

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நூர். இவர், மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் நூர் தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட அவரது மகன் அமானுல்லா தனது தாயை காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அமானுல்லா உயிரிழந்தார்.
News February 12, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க


