News November 7, 2025
கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
Similar News
News February 11, 2026
கரூர் மணல் திருடர்களை சிறைபிடித்த EX அமைச்சர்!

கரூர் வாங்கல் அருகே காவிரியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பொக்லைன் மற்றும் ஒரு லாரியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறைபிடித்தார். பின்னர் பேசிய அவர், “அரசு அனுமதியின்றி தினமும் 300 லாரிகளில் ₹3 கோடிக்கு மணல் கடத்தப்படுகிறது; இதில் திமுகவினருக்குத் தொடர்புள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
News February 11, 2026
கரூரில் தட்டிதூக்கிய செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்டம் அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் M.D.A துரைமுருகன் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட அமைப்பாளர் பூவை ரமேஷ் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
News February 10, 2026
கரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


