News April 19, 2024
மதுரையில் முதல்முறையாக சூப்பர் அறிவிப்பு!

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
மதுரை: காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன்.. மிரட்டிய இளைஞர்

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி, காரியாபட்டி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அம்பலத்தடியை சேர்ந்த விருத்தீஸ் (20) என்ற இளைஞர் காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, மாணவியை நேற்று முன்தினம் விருத்தீஸ் வழி மறித்து தாக்கி, தகாத வார்த்தையால் திட்டி, ஆசிட் வீசுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விருத்தீசை கைது செய்தனர்.
News December 31, 2025
மதுரை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு உடனே இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
மதுரை: போலீஸ் ஐ.ஜி டிரான்ஸ்பர்.. புதிய ஐ.ஜி நியமனம்

மதுரை, புதிய தென் மண்டல ஐஜியாக விஜேந்திர பிதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா, பதவி உயர்வு பெற்று ஆவடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பதிலாக சென்னையில் கூடுதல் கமிஷனராக இருக்கும் விஜேந்திர பிதாரி புதிய தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


