News November 7, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 7, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் நாளை (நவ.08) பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
News November 7, 2025
சென்னை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News November 7, 2025
’எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்கக் கூட முடியாது’

சென்னையில் திமுக நிர்வாகி இரா.ஏ.பாபு இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ‘நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகளை அனுபவித்தனர். இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது’ என்றார்.


