News November 7, 2025
ராம்நாடு: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 – இது முக்கியம்?

இராமநாதபுரம் மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 04567-230466. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
Similar News
News November 7, 2025
ராம்நாடு: கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் மற்றும் கோகுல நாத் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் மீது காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 7, 2025
ராம்நாடு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரத்தில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
ராம்நாடு: புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் 40 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகளின் மேல் பயணிகளின் வசதிக்காக 10 மின்விசிறிகள் அமைக்கபட்டுள்ளன. தற்பொழுது வெயில் அடித்து வரும் நிலையில் பயணிகள் மின்விசிறி இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


