News November 7, 2025
Business 360°: கார் விற்பனையில் மாருதி சுசூகி சாதனை

*இந்தியாவில் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது. *நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹49,456 கோடி லாபம் ஈட்டியுள்ளன. *செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி 60.9 புள்ளிகளாக பதிவு. *கூகுள் மீது ஆப்பிள் நிறுவனம் ₹9 ஆயிரம் கோடி முதலீடு. *தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு.
Similar News
News November 7, 2025
மேல் நோக்கி சுடும் துப்பாக்கி குண்டுகள் எங்கே போகும்?

வானத்தை நோக்கி Gunfire செய்யும்போது மேலே செல்லும் புல்லட், பின் ஈர்ப்பு விசையால் மீண்டும் கீழே விழும். அப்போது அங்கு யாராவது இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்படலாம். ஆனால் ராணுவ மரியாதைக்காக வானத்தை நோக்கி சுடப்படும் குண்டுகளால் காயம் ஏற்படாது. காரணம், அப்போது பயன்படுத்தப்படும் தோட்டாவில் வெடிமருந்து இருக்காது. அது வெறும் காலி கார்ட்ரிட்ஜ் மட்டுமே. அதனால் சத்தமும் புகையும் மட்டுமே வரும். SHARE.
News November 7, 2025
விஜய்யை முதல்முறையாக விமர்சித்த அதிமுக

திரைப்புகழைக் கொண்டு சிலர் மாய பிம்பத்தை உருவாக்குவதாக, விஜய்யை மறைமுகமாக கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கிவிட்டதாக சிலர் நினைக்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார். தவெக தலைமையில் தான் கூட்டணி என விஜய் திட்டவட்டமாக அறிவித்ததால், விஜய்யை தாக்கி பேச அதிமுக தலைவர்கள் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 7, 2025
வாட்ஸ்ஆப் to பிற ஆப்களுக்கும் மெசேஜ் அனுப்பலாம்.. ஆனால்?

வாட்ஸ்ஆப்பில் இருந்து அரட்டை உள்ளிட்ட பிற மெசேஜிங் ஆப்களுக்கும், அந்த ஆப்களை டவுன்லோட் செய்யாமலேயே, மெசேஜ் அனுப்பும் வசதியை, மெட்டா பரிசோதித்து வருகிறது. டிஜிட்டல் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுக்க, ஐரோப்பிய யூனியன் சட்டங்களை கடுமையாக்கியதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா எந்த தகவலையும் வெளியிடவில்லை.


