News November 7, 2025

தொலைந்து போன போனை நீங்களே கண்டுபிடிக்கலாம்

image

மத்திய அரசின் ‘Sanchar Saathi’ இணையதளம் மூலம் தொலைந்துபோன உங்கள் போனை ட்ராக் செய்து கண்டுபிடிக்கலாம். இதில் வேறு யாரும் உங்கள் போனை பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தால்தான் Sanchar Saathi மூலம் போனை கண்டுபிடிக்க முடியும். <>Sanchar Saathi<<>> போர்ட்டலுக்கு சென்று ‘IMEI’ போன்ற விவரங்களை உள்ளிட்டு போனை கண்டுபிடியுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News January 29, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 29, தை 15 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 12:45 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News January 29, 2026

ராகுல் – கனிமொழி சந்திப்புக்கு காரணம் இவரா?

image

சமீபத்தில், திமுக இதுவரை தங்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவே இல்லை என TN காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அடாவடி அணுகுமுறை காரணமாகவே யாரும் பேச வேண்டாம் என ஸ்டாலின் கட்சிக்குள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், இனி தொகுதி பங்கீடு குறித்து நேரில் பேசிவிடலாம் என்ற முடிவின்படியே, ராகுல் – கனிமொழி பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

News January 29, 2026

சென்சார் விதிகளை பின்பற்ற வேண்டும்: சவுந்தர்யா ரஜினி

image

தணிக்கை வாரியம் இன்றோ, நேற்றோ புதிதாக உதயமான அமைப்பல்ல. அது மதிக்கப்பட வேண்டும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும்,ரசிகர்களுக்கு எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அந்த தணிக்கை வாரியமே முடிவு செய்கிறது என்றும், இந்தியாவில் சினிமா படங்கள் சென்சார் வாரியத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் வழக்கம் எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!