News November 7, 2025
கோவையில் கோடி கணக்கில் மோசடி

காரமடையை சேர்ந்த விஜயா நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரின் நிறுவனத்தில் மேனேஜராக கார்த்திகேயன், கலெக்சன் ஏஜென்டாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், அருண்குமார் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் மக்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.1.41 கோடி பணத்தை நிறுவனத்திற்கு செலுத்தாமல் 3 பேரும் மோசடி செய்ததாக கோவை குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், ஸ்ரீகுமாரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 7, 2025
கோவை சம்பவம்: அதிரடி நடவடிக்கை

கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சமீபத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் சமூக நலத்துறை, காவல் துறை இணைந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 7, 2025
நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம்கள்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2025-26 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்க சிறப்பு முகாம்கள் நவம்பர் 8, 9 தேதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்தார்.
News November 7, 2025
கோவை: B.E, B.Tech போதும் வேலை ரெடி

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)


