News November 7, 2025

சிவகங்கை: மூதாட்டி தலையை கடித்து குதறிய நாய்

image

நெல்முடிக்கரையை சேர்ந்த சுந்தராம்பாள் என்பவர் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார். அப்போது தெரு நாய் ஒன்று வீட்டுக்குள் சென்று அவரை கடித்து குதறியுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தெருநாயை விரட்டி மூதாட்டியை திருப்புவனம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மட்டும் சிவகங்கையில் 7 பேரை தெருநாய் கடித்துள்ளது.

Similar News

News February 3, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 3, 2026

சிவகங்கை: உங்க வீட்டுல குழந்தை இருக்கா.? கலெக்டர் குட் NEWS

image

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள பெற்றோர்கள், எந்தவித தயக்கமும் இன்றி தங்களை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 வயது முதல் 6 வயது வரை ஆன குழந்தைகளை தவறாது அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடைய மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி அழைப்பு விடுத்துள்ளார். இதை தேவைப்படுவோருக்கு SHARE பண்ணி உதவுங்க.

News February 3, 2026

சிவகங்கை: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 484 மனுக்கள்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 484 மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!