News November 7, 2025
சர்வர் கோளாறால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (ATC) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News February 18, 2026
‘Hump day’ என்றால் என்ன தெரியுமா?

புதன்கிழமையை அமெரிக்காவில் ‘Hump day’ என்று அழைக்கின்றனர். இந்தியாவில் ஐடி துறையினரும் அப்படியே குறிப்பிடுகின்றனர். திங்கள் – வெள்ளி வரை உள்ள நாள்களில், 3 நாள்களை வெற்றிக்கரமாக முடிப்பதால் புதன்கிழமையை Hump day என்று அழைக்கின்றனர். இதையடுத்து விடுமுறைக்கு 2 நாள்கள் மட்டுமே இருக்கும். எனவே, இந்த புதன்கிழமைக்கு உற்சாகமாக இப்படி ஒரு பெயர் வைத்துள்ளனர். நீங்கள் புதன்கிழமையை எப்படி பார்க்கிறீர்கள்?
News February 18, 2026
‘முதல்வன்’ புகழேந்தி மாதிரி தலைவன் வரணும்: அர்ஜுன்

‘முதல்வன்’ போன்ற ஒரு அரசியல் கதையை தான் தயாரித்து வைத்திருப்பதாக அர்ஜுன் கூறியுள்ளார். மக்கள் மனதில் புகழேந்தி மாதிரி ஒருதலைவன் வரமாட்டானா என்று இருந்த ஏக்கமும், வலியுமே ‘முதல்வன்’ படம் எனக் குறிப்பிட்ட அவர், அதில் மக்களின் நிஜமான ஆதங்கம் பிரதிபலிக்கப்பட்டதாலேயே, அப்படத்தின் தாக்கம் இன்றும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அரசியலில் புகழேந்தி மாதிரியான தலைவன் நிச்சயம் வரவேண்டும் எனவும் கூறினார்.
News February 18, 2026
கூட்டணி கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஸ்டாலின் அதிர்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு 2021-ஐ போலவே 6 இடங்களை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவுடன் தொகுதி பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் (10) தொகுதிகள் பெறுவது என முடிவு செய்துள்ளதாகவும் பெ.சண்முகம் உறுதியாக தெரிவித்துள்ளார். இது கூட்டணி தலைவரான ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


