News November 7, 2025

முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் மஸ்க்!

image

எலான் மஸ்க்குக்கு 1 ட்ரில்லியன் டாலரை (₹88 லட்சம் கோடி) ஊதியமாக வழங்க டெஸ்லாவின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லா பங்குகளாக அவர் பெறுவார். இதன் மூலம், அவர் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக வாய்ப்புள்ளது. டெஸ்லா சந்தை மதிப்பில் $8.5 டிரில்லியனை அடைய வேண்டும் என இவருக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

அரசுப் பள்ளிகளில் ‘அயலி’ பார்க்க ரெடியா மாணவர்களே!

image

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ‘அயலி’ ஒளிபரப்பப்பட உள்ளது. மாணவர்களே, படம் பார்க்க ரெடியா!

News January 26, 2026

NDA கூட்டணியில் ஓபிஎஸ்? TTV தகவல்

image

OPS-ன் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு உற்று நோக்கப்படுகிறது. இந்நிலையில், OPS-ஐ அம்மாவின்(ஜெயலலிதா) உண்மைத் தொண்டர் எனக் குறிப்பிட்ட TTV தினகரன், தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் OPS-க்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

நகைக் கடன்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்!

image

பிப்.1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் வரலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நகைக் கடன் வழங்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு கிடைப்பது போல் Priority Sector Lending போன்ற ஆதரவுகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், நகைக் கடனுக்காக பணத்தை திரட்டும் செலவு குறையும். இதனால், மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன்கள் வழங்க முடியும்.

error: Content is protected !!