News November 7, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

வேலூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
Similar News
News February 16, 2026
வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்க உள்ள முதல்வர்!

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை நாளை (பிப்ரவரி 16) காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News February 15, 2026
எஸ்பி தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (பிப்ரவரி 16) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. வேலூரின் பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலாற்றில் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி வேலூர் எஸ்பி சிவராமன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


