News November 7, 2025
இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர் தற்போது பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். இதையடுத்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி நேற்று இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்று கொண்டார்.
Similar News
News February 13, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News February 13, 2026
பரமக்குடி: பெண்ணிடம் 8 சவரன் நகை பறிப்பு!

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 13, 2026
ராமநாதபுரம்: உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply!

ராம்நாடு மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <


