News November 7, 2025
நெல்லையில் ரயில் நிறுத்தும் நடைமேடை மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, சில முக்கிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் அனைத்தும் 5வது நடைமேடையில் நிறுத்தப்படும் என தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Similar News
News February 7, 2026
பாளையங்கோட்டை சிறை ஜெயிலரை தாக்கிய கைதி

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 7, 2026
நெல்லை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

நெல்லை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <
News February 7, 2026
நெல்லை: தளபதி சமுத்திரம் குளத்தில் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழூர் தெப்பக்குளத்தில் இன்று இரவு ஒருவர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து நாங்குநேரி நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த நபரை சடலமாக மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் ஆறுமுகம்(65) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


