News November 7, 2025

T20 WC: 5 நகரங்களை குறிவைக்கும் BCCI!

image

அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பை, இந்தியா & இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் போட்டிகளை நடத்த, 5 நகரங்கள், அதாவது அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை & மும்பை ஆகிய நகரங்களை BCCI தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இத்தொடர் பிப்ரவரி 7, 2026-ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 25, 2026

நல்லகண்ணு காலமானார்.. கடைசி PHOTO

image

மறைந்த கம்யூ., தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு திருமா, எல்.முருகன், நயினார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து CPI தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல் நாளை தானம் செய்யப்படவுள்ளது. <<-se>>#RIP<<>>

News February 25, 2026

பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியல்

image

இந்தியாவில் மாநிலங்களின் பெயர் மாற்றம் என்பது சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது வெறுமனே பெயர் மாற்றமாக மட்டுமில்லாமல், ஒரு மாநிலத்தின் பண்பாட்டையும், அடையாளத்தையும் குறிப்பிடும் விதமாகவே மாற்றம் கண்டுள்ளது. தற்போதைய ’கேரளம்’ வரை நாட்டில் இதுவரை பெயர் மாற்றப்பட்ட மாநிலங்கள் என்னென்ன என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.

News February 25, 2026

கேரள மக்களை இனி அழைப்பது எப்படி? சசிதரூர்

image

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்றுள்ள சசிதரூர், ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். ஆங்கிலத்தில் கேரள மக்களை Keralite, Keralan என அழைப்பது வழக்கம். பெயர் மாற்றத்திற்கு ஏற்ப, Keralamite என்றழைப்பது ஒரு நுண்ணுயிரி போலவும், Keralamian என்றழைப்பது அரியவகை கனிமம் போலவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள சசிதரூர், இது தேர்தல் ஸ்டண்ட் என்றும் கிண்டலடித்துள்ளார்.

error: Content is protected !!