News November 7, 2025
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News November 7, 2025
கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
News November 7, 2025
கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 7, 2025
கரூர்: தீக்குளித்த ஊழியர் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புதுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (39), பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார். மனைவி சித்ராதேவி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


