News November 7, 2025

கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 26, 2026

கடலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

News January 26, 2026

கடலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. கடலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 26, 2026

வடலூர்: ஜோதி தரிசனம் நேரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5. 30 மணி என 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!